எனது பெயர் ஜோசப் பென்சிகர் எனது வாழ்க்கை குறிப்பு (BIO-DATA) என்னைப் பற்றிய விவரங்களை தருகிறது. 22.12.1969யிலிருந்து 14.01.1987 வரை, ஏறக்குறைய 17 ஆண்டுகள் சமயப்பணி ஒன்றில் ஈடுபட்டிருந்தேன். 14.01.1987-ல் இருந்து www.maduraibethany.org என்ற அமைப்பில் ஏழை சிறுவர்களுக்கான இலவச கல்விப் பணியை பெத்தனி சிறுவர் இல்லம் வழியாக செய்து வருகிறேன். 03.01.2015 அன்று எனது எழுபது வயது நிறைவடைந்தது. என்னுடைய வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இலக்கியப் பணியுடன் கலந்த அறப்பணி ஒன்றை தொடங்க எண்ணியுள்ளேன். www.thirukkurallarivippoam.org ( since 14.04.2015 ) என்ற அமைப்பின் வழியாக திருவள்ளுவரின் உன்னத சிந்தனைகள் இரண்டை மட்டும் எடுத்து உலகளாவிய விளம்பரம் செய்து உலகமக்கள் அதை அறியவும் அறிந்து செயல்படவும் வேண்டும் என்று எண்ணி திருக்குறள் அறிவிப்பு பணியை செய்ய விரும்புகிறேன்.

அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். இன்றைய உலகில் அநேக பிரச்சனைகளுக்கு காரணம் அறியாமையும் மூடநம்பிக்கையுமே! இன்சொல் சொல்வதனால் சமுதாயத்தில் பல நன்மைகள் ஏற்படும

இடப்புறம் செல்க (Keep Left)) என்ற இரண்டு வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு உலகில் அனைத்து சாலை போக்குவரத்து வாகனங்களும் ஓடிக்கொண்டிருப்பதனால், உலகில் சாலை போக்குவரத்து சீராக இயங்கி கொண்டிருக்கிறது, அது போன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு குறள்களை மட்டும் பின்பற்றினால் போதும் . உலகில் அறநெறி வாழ்க்கை நிச்சயம் மேம்பாடு ௮டையும் என்பது எனது ஆழமான நம்பிக்கை.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
அல்லவை தேயஅறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

பின்குறிப்பு :

தபால் முகவரி தருபவர்களுக்கு பனைஓலை திருக்குறள் புத்தக அடையாள அட்டைகள், சாதாரண புத்தக அடையாள அட்டைகள், திருக்குறள் போஸ்டர்கள் (பிரேம் பண்ணி மாட்டுவதற்காக) ஸ்டிக்கர்கள் போன்றவைகள் இலவசமாக அனுப்பப்படும் நன்கொடைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.